Thursday 24 February 2011

NATPU 2

சொல்லத்தான் வேண்டுமா?
   சொற்களில் அடங்காத
மெல்லிய உணர்வு இதை
  மெல்லத்தான் உணர்ந்திடனும்

அழகான உன் விழிகள்
  அழுத போதா?... அதை
அருகிருந்து என் விரல்கள்
  துடைத்த போதா?

வண்ண வண்ண கோலம் - நீ
  வரைந்த போதா?
வாயார நான் அதனைப்
   புகழ்ந்த போதா?

எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்
   இனிய தோழி !
எப்போது நம் நட்பு
  பூத்ததென்று.......!!!







Tuesday 15 February 2011

NATPU

யாசித்தால் வந்திடுமோ?
பேசித்தான் வளர்ந்திடுமோ?
நாசித் துவாரத்தில் நடனமிடும்
சுவாசத்தின் மேலான
உணர்வுகள் ஒன்று கூடி
யாசித்தால் வந்திடுமோ ?
மாசற்ற மனங்களின்
நேசத்தின் சங்கமமோ
இதுவோ?..   அதுவோ?....  அது எதுவோ?
அது ...
         ...
         ...   நட்பு










KANAVU

அதிகாலைக் கனவினிலே
  அவன் வந்தான்
முன்தினம் நடந்ததற்கு
 முழுப்பொறுப்பு நான் என்றான்
காதலுடன் கரம் பற்றினான்
  கண்ணீர் துடைத்தான்
மண்டியிட்டான் என்முன்
  மயக்கும் விழியால் நோக்கினான்
மன்னிப்புக் கேட்டான் என்
  மடியினில் தலை சாய்த்தான்
மறந்துவிடு எல்லாம் - இனி
  மனம் மாறமாட்டேன் என்றான்
அவன் மதுரக் குரலில்
  மனம் மாறினேன்
அருகில் சென்று ஆசையோடு
  ஆரத்தழுவ எத்தனித்தேன்....
என் அருமை கனவை வெறுமையாக்கி ...
  ஒலித்து ஒலித்து எனை விழிக்கச்செய்தது
 ...............  குறுஞ்செய்தி.. !!!
கனவிற்குமா காலன்













MAZHAIYAE..! MAZHAIYAE.....!!

சாலைஎல்லாம் வெள்ளம்!
    சாக்கடை நீருடன் சங்கமம்
உன் வரவு
    சராசரி மனிதனுக்கோ சிரம பரிகாரம்
சாலையோரவாசிக்கு  சிவராத்திரி
   நீ...
சாமானியர்களின் வாழ்க்கையை
   சங்கடப்படுத்தினாலும் ......
உன் வரவால் மகிழ்வது
   மனித மனங்கள் மட்டுமல்ல
  மாக்களும், மரங்களும் கூடத்தான்